Type Here to Get Search Results !

1 பில்லியன் பட்ஜெட்டில் அவதார் 2-ம் பாகம் ஷுட்டிங் தொடங்கியது





2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் படத்தை நாம் யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டோம். இப்படம் ஹாலிவுட் சினிமாவையும் தாண்டி உலக அளவில் உள்ள ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. 2 பில்லியன் டாலர் வசூல் சாதனையையும் இத்திரைப்படம் படைத்தது. இந்த படம் செய்த சாதனைகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அவதாரின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும் என படக்குழுவின் தரப்பில் கூறப்பட்டிருந்தது. 2020-ம் ஆன்டில் அவதார் இரண்டாம் பாகம் வெளிவரும் என அறவிக்கப்பட்டிருந்தது.

மேலும் 2021-ல் மூன்றாம் பாகமும், 2024-ல் நான்காம் பாகமும், 2025-ல் ஐந்தாம் பாகமும் வெளிவர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவதார் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் மொத்தம் 1 பில்லியன் பட்ஜெட் என தெரிகிறது. அவதார் 2 காட்சிக் களம் தண்ணீருக்கு அடியில் இருக்கும் என்று ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad