நடிகை காருக்குள் ஆடை இல்லாமலிருந்த நடிகர்
காரை பயணத்துக்கு மட்டுமல்லாமல் சிலர் லாட்ஜ் போலவும் பயன்படுத்துகிறார்கள். சாப்பிடுவது, உறங்குவது, விசிடி பார்ப்பது, பாட்டுகேட்பது இன்னும் சில சமயங்களில் பலான சமாச்சாரத்துக்கும் பயன்படுத்துகின்றனர். இந்தியில் டாப்ஸி, ஜாகுலின் பெர்னான்டஸ், வருண் தவான் நடிக்கும் படம் ‘ஜூட்வா 2’. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இந்த நட்சத்திரங்கள் பங்கேற்று வருகின்றனர். நேற்றுமுன் தினம் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வருண், ஜாகுலின் பங்கேற்றுவிட்டு பட புரமோஷனுக்கு செல்ல திட்டமிட்டனர்.
நேரம் குறைவாக இருந்ததால், அம்பானி வீட்டு நிகழ்ச்சி முடிந்ததும் வேறு உடையில் பட நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்த வருண், அங்கிருந்த ஜாகுலின் காருக்குள் உடை மாற்றத் தொடங்கினார். பேன்ட், ஷர்ட்டை கழற்றிவிட்டு வேறு உடைகளை அவர் மாற்றிக் கொண்டிருந்ததை மறைந்திருந்து ஜாகுலின் வீடியோவாக படம் எடுத்தார்.
பிறகு அதை இணைய தளத்தில் வெளியிட்டு தனது குறும்புத்தனத்தை காட்டினார். அத்துடன் ‘எனது காரை நீங்கள் (வருண் தவான்) உடை மாற்றும் அறையாக பயன்படுத்துகிறீர்கள்’ என்று கமென்ட்டும் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை ஜாகுலின் காருக்குள் இருந்து எடுத்தாரா அல்லது காருக்கு வெளியிலிருந்து எடுத்தாரா என்பதுபற்றி குறிப்பிடவில்லை.