பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் வசமானால்? அமெரிக்கா அச்சம்
தீவிரவாதிகளை ஒழித்து கட்டுவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். மேலும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வந்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது.
அதுமட்டுமின்றி அமெரிக்கா விரைவில் தீவிரவாததுக்கு எதிராக தாக்குதலை தொடங்கப் போவதாகவும், முதலில் பாகிஸ்தானில் ஆரம்பிக்க உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் வசமானால் உலகம் என்ன ஆகும் என்று அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி கமார் ஜாவோத் பாஜ்வா, நாங்கள் அமெரிக்காவிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும், தங்களை அமெரிக்கா மரியாதையாக நடத்த வேண்டும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு பயந்து பாகிஸ்தான் அரசு விரைவில் பாராளுமன்றத்தை கூட்ட உள்ளது.