தமன்னாவுக்கு வந்த ‘லீட் ரோல்’ ஆசை
அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, வித்யாபாலன், கங்கனா ரனாவத் போன்ற நடிகைகள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின் றனர். ஒன்று கைவிட்டாலும் இன்னொரு படம் கைகொடுப்பதுடன் ஹீரோ நடிக்கும் படத்துக்கு சமமாக தங்களுக்கும் இதுபோன்ற படத்தில் முக்கியத்துவம் தரப்படுவதால் விரும்பி ஏற்கின்றனர். இதுநாள் வரை பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த தமன்னாவுக்கு திடீரென்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள லீட் ரோல் நடிக்க ஆசை வந்திருக்கிறதாம்.
வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு குணால் கோஹ்லி இயக்கும் பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் தமன்னா. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். கதை முழுவதும் தன் தோள் மீது தாங்கவேண்டிய பொறுப்பு தமன்னாவுக்கு ஏற்பட்டிருப்பதால் முழுகவனத்தையும் கதாபாத்திரம் பக்கம் திருப்பி இருக்கிறாராம். எப்படி யாவது ஒருகை பார்த்துவிட வேண்டும். திரிஷா, அனுஷ்கா, நயன்தாராபோல் தனக்கும் சோலோ ஹீரோயின் கதைகள் தேடி வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ஆழந்திருக்கிறாராம் தமன்னா.