டொனால்டு டிரம்ப் உதவியை நாடும் விஷால்
பைரஸியை முற்றிலுமாக ஒழிக்க தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அமெரிக்க அதிபரின் உதவியை நாட உள்ளார். வெளிநாட்டில் உள்ள சர்வர்களில் இருந்துதான் பைரஸி வேலைகள் நடைபெறுவதால், விஷால் அமெரிக்க அதிபரின் உதவியை நாட உள்ளார். விஷால் தலைமையிலான புதிய தயாரிப்பாளர் சங்க அணி பதவியேற்ற பிறகு, பல நல்ல திட்டங்களை சினிமா உலகத்திற்காக செயல்படுத்தி வருகிறது.
ஆரம்ப காலம் முதலே பைரஸி பிரச்சனையிலிருந்து தமிழ் சினிமாவை மீட்டெடுக்க நேரடியாகவே களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார் விஷால். இந்நிலையில் உலக அளவிலான பைரஸி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், கையெழுத்து வேட்டை ஒன்று நடைபெற்று வருகிறது. இதற்காக 1 பேரிடம் லட்சம் பேரிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு அதனை வெள்ளை மாளிகைக்கு அனுப்பு முடிவு செய்துள்ளார்.