தலயின் விவேகம், ரசிகர்களை திருப்திபடுத்தவில்லையா...?
சென்னை: அஜித் நடிப்பில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் படம் "விவேகம்", உலகமெங்கும் இன்று காலை வெளியான விவேகம் திரைப்படம் அஜித் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளோடு வெளியாகியிருக்கும் அஜித்தின் ‘விவேகம்’ படம் இன்று சென்னையின் சில திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.
மதுரையில், அதிகாலை 2 மணிக்கே முதல் காட்சி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட் விலை ரூ.1000 முதல் 1500 வரை நிர்ணயிக்கப்பட்டாலும், ரசிகர்கள் புலம்பியபடியே டிக்கெட் வாங்கி, அஜித்தின் ‘விவேகம்’ படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இன்று அதிகாலை திரையிடப்பட்ட காட்சி முடிந்த பிறகு ரசிகர்களிடம், படம் எப்படி? என்று விசாரிக்கையில், “எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை” என்று ஒருவர் கூற, ரசிகர்களோ “ஒரு முறை பார்க்கலாம்” என்று கூறுகிறார்கள்.
பொதுவாக ரசிகர்கள் தங்களது ஹீரோவின் படம் சுமார் என்றாலும் அதை சூப்பராக எடுத்துக் கொல்வது தான் வழக்கம். ஆனால், அதிகாலை 4 மணி சிறப்பு காட்சியில் படம் பார்த்த ரசிகர்களே “சுமார்”, ஒரு முறை ”பார்க்கலாம்” என்று கூறியுள்ளனர்.
அஜித் ரசிகர்களே, தல படத்தை ஒரு முறை தான் பார்க்கலாம் என கூறியிருப்பது, ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் படம் எத்தகைய வரவேற்பை பெறும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
