விவேகம் டிக்கெட் கேட்டு அஜித் ரசிகர்கள் சாலை மறியல்... போலீசார் தடியடி..!
புதுச்சேரி: புதுச்சேரியில் விவேகம் படத்தின், ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் வெளியானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 'விவேகம்' படத்தை முதல்காட்சியில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள், கடந்த வாரம் முதலே தயாராகி வந்தனர். புதுச்சேரியில் விவேகம் காமராஜர் சாலையில் உள்ள பாலாஜி திரையரங்கில் மட்டுமே திரையிடப்படுகிறது.
வழக்கமாக படம் வெளியிடப்படும் முதல் நாளில் ரசிகர் மன்றங்களுக்கான டிக்கெட் விநியோகிப்பது உண்டு. இந்நிலையில் ரசிகர்களுக்கான சிறப்பு டிக்கெட் கிடைக்கும் என நேற்று காலை முதல் திரையரங்கு முன்பு காத்திருந்த ரசிர்களுக்கு இரவு வரை டிக்கெட் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
நேரம் செல்ல செல்ல ரசிகர்கள் கூட்டம் உயர்ந்துகொண்ட சென்றது. பின்னர் நள்ளிரவில் டிக்கெட் இல்லை என அறிவிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் முழங்கங்களை எழுப்பியவாறு திரையரங்கை முற்றுகையிட்டனர்.
