கவர்ச்சி உடையில் எடுப்பாக தோன்றும் ஸ்ரேயாவின் இளமை ரகசியம் என்ன?








ரஜினி, விஜய், அஜீத் என எல்லா டாப் ஹீரோக்களுடனும் ஜோடி போட்ட ஸ்ரேயா திடீரென்று மார்க்கெட் இழந்தார். ஒரு கட்டத்தில் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இதையடுத்து அவரது வாய்ப்புகள் ஊசலாட்டத்தில் இருந்து வந்தது. 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சிம்புவுடன் டிரிப்பிள் ஏ படத்தில் சமீபத்தில் நடித்தார். தற்போது தமிழில் கைவசம் படம் எதுவும் இல்லை. சீனியர் ஹீரோயின்கள் வாய்ப்புகளை அள்ளிக் கொண்டிருக்கும் போது தனது பட வாய்ப்பு டல்லடித்ததுபற்றி ஸ்ரேயா ஆலோசித்து வந்தார்.

மார்க்கெட் இழந்த நடிகைகள் மீண்டும் வாய்ப்புகள் பெற கவர்ச்சி படங்களை இணைய தளத்தில் வெளியிடுவதுபோல் நீங்களும் கவர்ச்சி படங்கள் வெளியிடுங்கள் என சிலர் யோசனை கூறினர். அது மட்டும் போதாது என்று கூறிவந்த ஸ்ரேயா, மாடல் அழகியாக மாற முடிவு செய்தார். கவர்ச்சி உடை அணிந்து அழகு நடை நடந்தால் அது தனக்கு கைகொடுக்கும் என்ற முடிவுக்கு வந்தார்.

அங்கங்களை கண்கள் ஊடுருவிப்பார்க்கும் கண்ணாடி போன்ற வெள்ளை நிற கவுன் அணிந்து படுகவர்ச்சியாக சமீபத்தில் நடந்த அழகிகள் அணிவகுப்பு மேடையில் பூனை நடை நடந்து வந்து அசத்தினார் ஸ்ரேயா. இது திரையுலகினர் கவனத்தை கவர்ந்துள்ளது. 34 வயதானபோதும் கட்டுக்குலையாத ஸ்ரேயாவின் எழில்தோற்றம் கண்களை கவர்ந்தது. அழகின் ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டபோது ‘யோகா பயிற்சியின் மூலம் உடல் தோற்றத்தை இளமையாக வைத்திருக்க முடியும். அதுதான் எனக்கு உதவுகிறது’ என்றார்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url