டோக்லாம் விவகாரம்: பாடம் கற்று கொள்ளுங்கள் இந்தியாவுக்கு சீன ராணுவம் மறைமுக எச்சரிக்கை




பெய்ஜிங்: டோக்லாம் பிரச்னை மூலம் இந்தியா பாடம் கற்று கொள்ள வேண்டும் என சீன ராணுவம் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா - சீனா - பூட்டான் எல்லையில் டோக்லாம் பகுதி உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்கு, இந்திய ராணுவ படைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பணிகளை தொடரவிடமால் நிறுத்தின.  அதை தொடர்ந்து, சிக்கிம் எல்லையில் போர் பதற்ற சூழல் உருவாகியது. இரு நாட்டு படைகளும், அங்கு குவிக்கப்பட்டன. இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்தன. இதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து தூதரக ரீதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் எல்லை பிரச்னைக்கு சுமுக தீர்வு காணும் வகையில், இரு நாடுகளும், படைகளை திரும்பப் பெறுவதென, முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீன ராணுவத்தின் மூத்த அதிகாரி வியூ குயான் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவுடன் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, சீன ராணுவம் எப்போதும் போல், தனது எல்லை மற்றும் இறையாண்மையை தொடர்ந்து விழிப்புடன் காத்து நிற்கும். டோக்லாம் பிரச்னையிலிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன். ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, சீனாவுடன் இணைந்து செயலாற்றி எல்லையில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவ இந்தியா ஒத்துழைக்க வேண்டும். இரு நாட்டு ராணுவம் உறவு வலுப்பெறுவதை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url