இந்தியாகோரக்பூரில் 2 நாட்களில் 42 குழந்தைகள் உயிரிழப்பு: மூளைக் காய்ச்சலால் உத்தரப்பிரதேசத்தில் சோகம்
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் மூளைக் காய்ச்சல் பாதித்து குழந்தைகள் உயிரிழக்கும் அவலம் நீடித்து வருகிறது. கடந்த 30 நாட்களாக கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 42 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தன. மேலும் போதிய மருத்துவர்கள் இல்லாதது, கோரக்பூர் சுற்றுவட்டாரத்தில் சுகாதார விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் அங்கு மூளைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை இல்லை என்பது பரவலான புகார் ஆகும்.