காதலுனுக்கு விலையுயர்ந்த கார் பரிசளித்த நம்பர் 1 நடிகை




காதலுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராகி விட்டாராம், நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் அந்த நம்பர் நடிகை. கடவுளின் பெயர்களைக் கொண்ட இயக்குனருக்கு தன் காதல் பரிசாக சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கிக் கொடுத்த நடிகை, இப்போது விலையுயர்ந்த காரும் பரிசளித்திருக்கிறாராம்.

சமீபத்தில் சிலர், கல்யாணம் எப்போது என்று இயக்குனரிடம் கேட்டபோது, சிரித்து மழுப்பி, அந்த இடத்தை விட்டே மாயமாகி விட்டாராம். சேர்ந்து வாழ்வதை ஒப்புக்கொள்ளும் காதலர்கள், திருமணத்தைப் பற்றி கேட்டால் மட்டும் ஏன் ஓடி ஒளிகிறார்கள் என்று, சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url