விளையாட்டு துளிகள்
* இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகரமாக சச்சின் டெண்டுல்கரை நியமிக்கலாம் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பரிந்துரைத்துள்ளார்.
* ஆசிய தடகள போட்டியின் மகளிர் குண்டு எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவரது தங்கப் பதக்கம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
* பயிற்சியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. தலைமை பயிற்சியாளர் சாஸ்திரி ஆண்டுக்கு 7.5 கோடி பெற உள்ளார். துணை பயிற்சியாளர் பாங்கர் 2.3 கோடி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் 2.2 கோடி, பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருக்கு 2 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழல் ஹெராத் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்தியாவின் அஷ்வின் 3வது இடத்துக்கு பின்தங்கினார்.