பிரம்மாண்ட செட்டில் ரஜினி - எமி ஜாக்சன் நடனம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடித்து வரும் படம் 2.O. படத்தின் படப்பிடிப்புகள் ஒரே ஒரு பாடலை தவிர மற்ற அனைத்தும் முடிந்து விட்டது. 2.0 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த பாடல் காட்சிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. இது 12 நாட்கள் நடைபெற உள்ளது.
மிகப்பிரம்மாண்டமான இந்த செட்டில் தற்போது டான்ஸ் மாஸ்டர் பாஸ்கோ தனது நடனக்கலைஞர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானும் இந்த பாடல் பணிகளுக்கான முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். 3டியில் உருவாகி வரும் ‘2.0’ படத்தை 2018ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளது லைக்கா புரொடக்ஷன் நிறுவனம்.