ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிம்பு, தனுஷ் ஆதரவு
சமீபத்தில் லண்டனில் நேற்று இன்று நாளை என்ற இசை நிகழ்ச்சியை ரஹ்மான் நடத்தினார். இதில் தமிழ் மற்றும் இந்தி பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்திய ரசிகர்கள் சிலர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர். தங்களது டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ் திரையுலகினர் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "இசைக்கு மொழியில்லை. அதனால்தான் இசை மக்களை இணைக்கிறது. அத்தகையதே இசைமேதை ரஹ்மானின் இசையும். அமைதி நிலவுட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சைக் குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரஹ்மானுக்கு மொழி ஏதும் கிடையாது. அவரது மொழியே இசைதான். ரஹ்மானுக்கு நிகர் ரஹ்மானே. ஜெய்ஹோ என அவர் தெரிவித்துள்ளார்.