பசலிப்பழம் ........
மருத்துவக் குணங்கள்:
தோல் பச்சையாகவும் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் கிவி. தமிழில் அதன் பெயர் பசலிப்பழம்.
இதை நாம் கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
வைட்டமின்சியின் பணிகளை வைட்டமின் இ அதிகரிக்கும். இந்த இரண்டும் கிவி ப்ரூட்டில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி பழம் குணப்படுத்தும்.
முக்கிய பழச் சந்தைகள் மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி ப்ரூட்டை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.