இந்தி திணிப்புக்கு என்று குரல் கொடுத்தேனோ அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் : கமல் டுவிட்டரில் பதிவு
சென்னை :
இந்தி திணிப்புக்கு என்று குரல் கொடுத்தேனோ அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என கமலஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அரசின் ஊழல் குறித்த விபரங்களை ஆதாரத்துடன் www.tn.gov.in/ministerslist என்ற இணைய தளத்தற்கு அனுப்புங்கள் என்று ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு நடிகர் கமல் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயக்குமாரோ, எச்.ராஜாவோ நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்ததை உணராதவர்கள் என்று தெரிவித்தார். மேலும் ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள் என்று அமைச்சர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்குமொழியில் அறிவுரை அள்ளீவீசுகிறார்கள்... என்னை வரிஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது கோபமும் சிரிப்பும் வரவைக்கிறது என்று கமலஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.