துணை குடியரசு தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிப்பு
டெல்லி: பாஜக துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பாஜக தலைவர் அமித் ஷா டெல்லியில் அறிவித்துள்ளார். வெங்கய்யா நாயுடு தற்போது மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். துணை குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் சார்பில் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 5 ம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனுத்தாக்கள் செய்ய நாளை இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கய்யா நாயுடு வாழ்க்கை வரலாறு:
ஆந்திர மாநிலம் நெல்லுரைச் சேர்ந்த வெங்கய்யா நாயுடு சட்டம் படித்தவர் ஆவார். மாணவர் பருவத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏவிபிவி இணைந்து பணியாற்றியவர். 45 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் வெங்கய்யா நாயுடு ஈடுபட்டுள்ளார். 2002-2004 வரை பாஜக தேசிய தலைவராக பணியாற்றிவர் ஆவார்.