பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு! நாகாலாந்தில் உச்சகட்ட பரபரப்பு

நாகாலாந்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, தற்போதைய முதல்வர் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க மாநில ஆளுநர் கால அவகாசம் அளித்துள்ளார்.





நாகாலாந்து மாநிலத்தில், பெண்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையில் 33 சதவிகித இட ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் டி.ஆர்.ஜெலியாங் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. மேலும், இடஒதுக்கீடு விவகாரத்தை முதலமைச்சர் சரியாகக் கையாளவில்லை என்று கூறப்பட்டது. அத்துடன், பொதுமக்களின் போராட்டம் காரணமாக முதல்வர் டி.ஆர்.ஜெலியாங்குக்கு இதுவரை ஆதரவு அளித்துவந்த எம்எல்ஏ-க்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், கடந்த பிப்ரவரி மாதம் டி.ஆர்.ஜெலியாங் தனது பதவியை ராஜினாமாசெய்தார்.

இதைத்தொடர்ந்து, நாகாலாந்தில் எம்எல்ஏ-வாக இருந்த நாகா மக்கள் முன்னணி கட்சியின் மூத்த தலைவர் சுர்கோசெலி லீசெய்ட்சு புதிய முதல்வராகப் பதவியேற்றார். இந்நிலையில், தனக்கு 41 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகவும், அதனால் தன்னை முதலமைச்சராகப் பதவியேற்க அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் ஜெலியாங் ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.

இதனால், தற்போது நாகலாந்து கவர்னர் பி.பி.ஆச்சார்யா, முதலமைச்சர் சுர்கோசெலி லீசெய்ட்சு வருகிற 15-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு விதித்துள்ளார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url