என் மகனை நோயிலிருந்து காப்பாற்றியவர் ஏ.ஆர். ரஹ்மான்: கண்ணீருடன் இயக்குனர் ஷங்கர்!
எனது மகனை குணப்படுத்த டாக்டர்களே முடியாமல் கைவிரிச்ச பின் அவனை காப்பாற்றியவர் ஏ.ஆர். ரஹ்மான் என்று கண்ணீர் மல்க கூறினார் இயக்குனர் ஷங்கர்.
ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘எந்திரன்’ படப்பிடிப்பின் போது இயக்குனர் ஷங்கருக்கு எவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கார் தெரியுமா உங்களுக்கு. அந்த சாதனையை இயக்குனர் ஷங்கர் கண்ணீர் மல்க கூறியதாவது: ‘’நான் சந்தித்தவர்களிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி.
என் மகன் அர்ஜித் பிறந்ததுல இருந்து தொடர்ந்து அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு குணப்படுத்த முடியாமல் போறதுனு பல துயரங்களை நான் அடைந்தேன். எல்லாத்தையும் நாங்களும் அனுபவிச்சுக்கிட்டு இருந்தோம். வாரம் ஒரு தடவையாவது டாக்டர்கிட்ட எதுக்காகவாவது அவனை அழைச்சிக்கிட்டுப் போக வேண்டி வரும். ஆறு வயசுலயே எல்லா டாக்டர்களும் மருந்துகளும் அவனுக்கு அத்துப்படி.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ரஹ்மான், ‘ஷங்கருக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ... பையனை அழைச்சுக்கிட்டு மவுண்ட் ரோட்டில் உள்ள தர்ஹாவுக்கு வரச் சொல்லுங்க’னு அவர் மனைவி மூலமா என் மனைவிகிட்ட சொல்லியுள்ளார். நானும் பையனுக்குச் சரியானாப் போதும்னு போயிருந்தேன். பார்த்தா, ரஹ்மானே அவங்க அம்மாவோட தர்ஹாவுக்கு வந்திருந்தார்.
என் பையனுக்காக அரை மணி நேரம் ப்ரேயர் பண்ணாங்க. மந்திரிச்சுக் கயிறு எல்லாம் கட்டினாங்க. ரஹ்மான் எவ்வளவு பிஸியானவர்? அவர் ஸ்டுடியோவில் எவ்வளவு பேர் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானியா சில மணி நேரங்களை என் மகன் அர்ஜித்துக்காகச் செலவழிச்சு இங்கு வந்தது என்னைக் கண் கலங்க வெச்சிருச்சு.
ஆச்சர்யமான ஆச்சர்யம்! ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடியா ஆகிட்டான். ‘எப்படி இது சாத்தியம்’னுலாம் நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்!’’ என்று கூறினார் ஷங்கர்.