பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு சமந்தா, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்திற்காக சமந்தா சிலம்பாட்ட பயிற்சி எல்லாம் எடுத்திருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்க உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து 3-வதாக இந்த படத்தில் இணைந்துள்ளனர். வருத்தப்படாத வலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களுக்கு இசை அமைத்த டி.இமானே இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படப்பிடிப்பு ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. இதனால் பொன்ராம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் 16-ம் தேதி தொடங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ரஜாவின் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
Post a Comment
0 Comments