அஞ்சு, ஜெ...: ட்விட்டரில் ஜெய், அஞ்சலி கொஞ்சல்ஸ்
அஞ்சலியின் பிறந்தநாளையொட்டி நடிகர் ஜெய் ட்விட்டரில் காதல் பொங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாகவும், இருவரும் லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் பேசப்படுகிறது. ஒரு முறை அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்து அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு லிவ் இன் முறை வாழ்க்கையை கிட்டத்தட்ட உறுதி செய்தார் ஜெய். இந்நிலையில் அஞ்சலியின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜெய்.