Type Here to Get Search Results !

அஜீரணத்துக்கு ஆறுதல் தரும் சாதனம்!



டெக்னாலஜி

ஒருவரது வயிற்றுக்கு என்ன வகை உணவுகள் ஏற்றது என்பதை தீர்மானிக்க உதவும் சாதனத்தை சீனாவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.ஏர் (Aire) என்கிற இந்த கையடக்க சாதனத்தை வாயில் வைத்து ஊதினால் மூச்சுக்காற்றிலுள்ள வேதிப்பொருட்களில் வயிற்றுக் கோளாறுகளுக்கு காரணமானவற்றை கண்டறிந்து சொல்கிறது அந்த சாதனம். இந்த சாதனத்தை ஏர் மொபைல் செயலியுடன் இணைக்கும்போது, அது பயனாளியின் உணவுப்பழக்கம் மற்றும் ஒவ்வாமைகளைத் தொடர்ந்து பதிவு செய்யும். அதன்பின், இப்போது என்ன வகை உணவை அவர் சாப்பிடலாம் என்ற ஆலோசனையையும் அந்த சாதனம் தருகிறது.

நாம் உண்ணும் உணவில் உள்ள ஃப்ரக்டோஸ், லாக்டோஸ், சார்பிட்டால் போன்ற வேதிப்பொருட்கள் நம் வயிற்றுக்கு ஒவ்வாதபோது, அவை முழுமையாக செரிமானம் ஆவதில்லை. இதனால் வயிற்றிலுள்ள உணவுகள் நொதித்தல் என்ற வேதிவினைக்கு உட்பட நேரிடும். இந்த வேதிவினையால் ஹைட்ரஜன், மீத்தேன் போன்ற வாயுக்கள் நம் ரத்த ஓட்டத்தில் கலந்து, பின் சுவாசப் பையின் வழியே வெளியேற்றப்படும்.

இந்த வாயுக்களைத்தான் ஏர் சாதனமும், மொபைல் செயலியும் பிரித்தறிந்து ஆலோசனைகளை வழங்குகிறது. சிலருக்கு உட்கொள்ளும் உணவு வகைகள் ஒத்துக்கொள்ளாதபோது, வயிற்று செரிமானம் பாதிக்கப்படுகிறது. இதனால் வாயுத்தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். செரிமானப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏர் சாதனம் பற்றிய தகவல்  ஒருமகிழ்ச்சியான செய்திதான்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad