உன்னால தான் பாகுபலி வாய்ப்பு போச்சு, கடும் கோபத்தில் நயன் தாரா : காதலர் எஸ்கேப் !

நயன் தாரா




கொடுத்து வச்சது அவ்வளவுதான். என்று மனதைத் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை நயனுக்கு.

பாகுபலி படத்தில் தேவசேனா கேரக்டரில் அதாவது அனுஷ்கா நடித்திருக்க வேண்டிய ரோலில் நயன்தாராவைத்தான் ராஜமௌலி கேட்டார். சொல்கிறேன்  என்று கூறியவர். கொஞ்சம் அசந்து இருந்து விட்டார். பதிலும் சொல்லவில்லை.

அந்த கேப்பில் உள்ளே நுழைந்தவர் தான் அனுஷ்கா. இன்று உலகம் முழுக்க அனுஷ்காவை கொண்டாடுகிறார்கள். ஆடிப் போனார் நயன். பாகுபலிக்கு இவ்வளவு பெரிய பேரும், புகழும் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை.

பாகுபலியில் நடிக்க கேட்ட  போதுதான் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுதிருந்தார். காதல் மயக்கத்தில் இருவரும் நாடு நாடாகச் சுற்றினார்கள். அந்த நேரத்தில் நயனுக்கு வேறு எதுவும் பெரியதாகத் தெரியவில்லை.

விக்னேஸ் சிவனும் நயனை  சரியாகக் கைட் பண்ணவில்லை. இதனால் பாகுபலி போன்ற ஒரு பிரமாண்ட பட வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டார் நயன்.

இப்போது அந்தக் கோபம் காதலர் மீது திரும்பி இருக்கலாம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். காரணம் முன்பு போல இருவருக்கும் அவ்வளவு நெருக்கம் இல்லை என்பதுதான்.

நயனைப் போலவே ராஜமாதா கேரக்டரில் நடிக்க இருந்த ஸ்ரீதேவியும் கோட்டை விட்டார். இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி.

அதிர்ஷ்டம் சில நேரங்களில் தான்  வரும்..!   அப்படி வரும் போதே கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url