பட வாய்ப்பில்லாததால் கருத்து சொல்கிறேனா? கமல் நாயகி கோபம்
கமல் ஜோடியாக ஆளவந்தான், அர்ஜுன் ஜோடியாக சாது படங்களில் நடித்தவர் ரவீனா டாண்டன். பாலிவுட்டில் தற்போது நடித்து வருகிறார். சமூக வலை தளங்களில் பல்வேறு பிரச்னைகள் குறித்து உடனுக்குடன் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். பட வாய்ப்பில்லா மல் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார் ரவீனா, அதனால்தான் சமூக வலை தளங்களில் அவர் ஆர்வம் காட்டி தனது கருத்துக்களை சொல்லி வருகிறார் என கேலி செய்து வந்தனர்.
இதுகுறித்து பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்த ரவீனா தற்போது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கூறும்போது,’படங்களை தேர்வு செய்துதான் ஒப்புக் கொள்கிறேன் என்று நான் எனது பேட்டிகளில் தெரிவித்திருக்கிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் சிலர் அதை ேகலி செய்கின்றனர். எனக்கு பட வாய்ப்பு வருவதில்லை.
அதை மறைப்பதற்காகத்தான் தேர்வு செய்து படங்கள் நடிக்கிறேன் என சொல்வதாக தெரிவிக்கின்றனர். சமீபத்தில் எனக்கு வந்த சஸ்மி பதூர், கியா கூல் ஹை ஹம், குலாப் கேங், தில் தஹடக்னே டு உள்ளிட்ட பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் ஏற்கவில்லை. இந்த படங்களின் பெயரை குறிப்பிடுவதற்கு காரணம் என்னைப்பற்றி கேலி செய்பவர்களுக்கு பதில் சொல்வதற்காகத்தான்’ என்றார்.