வாழ்க்கை வரலாறு எழுத அனுபவம் பத்தாது : வித்யாபாலன்
திரையுலகில் நட்சத்திரங்கள் சிலர் தங்களது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளனர். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையாக உருவான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்தபிறகுதான் வித்யா பாலன் திரையுலக வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. இதையடுத்து கதாநாயகியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இயக்கும் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன. ‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை எப்போது எழுதப்போகிறீர்கள்? என வித்யாபாலனிடம் கேட்டதற்கு பதில் அளித்தார்.
அவர் கூறும்போது,’என் வாழ்க்கை சரித்திரத்தை இப்போதே எழுதுவதென்பது ரொம்பவே முந்தைய செயலாகிவிடும். அதற்கான நிலையை எட்ட இன்னும் என் வாழ்வில் நிறைய அனுபவங்களை நான் பெற வேண்டியிருக்கிறது. இதற்கு நிறைய ஒழுக்கமும், கட்டுப்பாடும் தேவைப்படுகிறது. அது என்னிடம் கிடையாது. பட அரங்கில் மட்டும்தான் நான் அடக்கமான பெண்ணாக இருப்பேன்’ என்றார்.