சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து பாலுக்கு விலக்கு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
காஷ்மீர்: சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து பாலுக்கு விலக்கு அளிக்கப்படும் என வருவாய்த்துறை செயலர் கூறியுள்ளார். சிகை எண்ணெய், சோப்பு, பற்பசை உள்ளிட்டவை மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கு ஒப்புதல் அளிக்கப்படடுள்ளது. உணவு தானிய வகைகளுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்ட மாட்டாது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய அமைச்சர் ஜெட்லி தலைமையில் நடைபெற்று வருகிறது. எந்தெந்தப் பொருளுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி விதிக்கலாம் என கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட முடிவு குறித்து வருவாய்த்துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார்.
சமையல் எண்ணெய், சரக்கரை, தேயிலை, காபி உள்ளிட்ட பொருட்களுக்கு %5 ஜிஎஸ்டி வரிவிதித்துள்ளது. சிகை எண்ணெய், சோப்பு, பற்பசை உள்ளிட்டவை மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.