ஜெர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் ‘ரோபோ’ பாதிரியார் நியமனம்
பாதிரியார் பணி யிலும் ‘ரோபோ’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அது பக்தர் களுக்கு ஆசி வழங்குகிறது.
பெர்லின்,
‘ரோபோ’ எனும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் மேலோங்கி நிற்கிறது. இந்த நிலையில் பாதிரியார் பணி யிலும் ‘ரோபோ’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அது பக்தர் களுக்கு ஆசி வழங்குகிறது.
இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த ‘ரோபோ’ ஜெர் மனியின் விட்டன் பெர்க் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் மார்டின் லூதர் பிராட்டஸ் டன்ட் சீர்திருத்தங்களை பரப்ப 95 ஆராய்ச்சி கட்டுரை களை எழுதியுள்ளார். அதன் 500-ம் ஆண்டு நினைவை குறிக்கும் வகையில் விட்டன் பெர்க் தேவாலயத்தில் ‘ரோபோ’ பாதிரியார் நியமிக் கப்பட்டுள்ளார்.
இந்த ‘ரோபோ’ வுக்கு ‘பிளஸ்யூ -2’ என பெயரிடப் பட்டுள்ளது. இது ஹெஸ்சி மற்றும் நசாயூ இவர்ஞ் சலிகல் கிறிஸ்தவ தேவாலயத் தினரால் உருவாக்கப்பட்டது. அதில் தொடுதிரையுடன் கூடிய உலோக பெட்டி உள்ளது. இரு புறமும் 2 கைகளும், 2 கண்களுடன் தலை உள்ளது. அதில் டிஜிட்டல் வாயும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயத் துக்கு வரும் பக்தர்களை இந்த ரோபோ ஆண் மற்றும் பெண் குரலில் வாழ்த்தி வரவேற்கிறது. மேலும் தனது 2 கைகளை உயர்த்தி அவர்கள் விரும்பும் மொழியில் ஆசி வழங்குகிறது. அப்போது கைகளில் சிவப்பு நிற விளக்கு எரிகிறது.
‘கடவுள் உங்களை ஆசீர்வ தித்து பாதுகாப்பாராக’ என்று பைபிளில் உள்ள வாசகத்தை கூறுகிறது. அதை பிரிண்ட் ஆகவும் எடுத்துக்கொள்ள முடியும். இது போன்று ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட 5 மொழிகளில் இது ஆசி வழங்குகிறது. தனிசிறப்பு மிக்க இந்த ‘ரோபோ’ தேவாலயத்துக்கு வருகை தரும் அனைத்து தரப்பினரையும் கவர்கிறது.
ஒரு இயந்திரத்திடம் ஆசிர்வாதம் பெறுவதா என ஒரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் பலரும் இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.