பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் ராஜஸ்தான் நீதிமன்றம் பரிந்துரை



பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என ராஜஸ்தான் ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.


எருது, பசு, காளை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக கொல்லக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகியவற்றில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

தமிழகத்தை பொருத்தவரை ஆங்காங்கே மாட்டுக் கறி உணவுத் திருவிழா நடத்தப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மாநில அரசுகளும் மேகாலயா , ஒரிசா வட கிழக்கு மாநில அரசுகளும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது மாநில அரசுகளின் அதிகார  வரம்புக்கு உட்பட்டது. எனவே நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல்- மந்திரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் ஐகோர்ட்டிலும் இதுபோன்ற ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த ராஜஸ்தான் ஐகோர்ட், பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும். பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் ராஜஸ்தான் அரசு சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url