Type Here to Get Search Results !

உருளைக்கிழங்கு

மூலிகை மந்திரம்


உருைளக்கிழங்கில் மருத்துவப் பயன்கள் உண்டா?
தலைப்பைப் பார்த்ததும் இப்படி ஒரு கேள்வி உங்கள் உள்ளத்தில் எழுந்தால் அது ஆச்சரியம் இல்லைதான். காரணம், உருளைக்கிழங்கு பற்றி அந்த அளவுக்கு எதிர்மறையான அபிப்பிராயங்கள் நம்மிடம் பரவிக்கிடக்கின்றன.

உலகை படைத்த உன்னதப் புருஷனான இறைவன் ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு சத்துவத்தைப் பொதித்து வைத்திருக்கிறான். நாம்தான் அவற்றை ஆய்ந்து அறிந்துகொள்ள விருப்பம் காட்டுவதில்லை. அப்படி ஒரு சத்துவம் நிறைந்த, நாம் கண்டுகொள்ளாத ஒரு உணவுப்பொருள்தான் உருளைக்கிழங்கும்!

இறைவன் படைத்த உணவுப்பொருட்கள் எல்லாம் இரைப்பையை நிரப்புவதற்கு, பசியை போக்க மட்டுமே அல்ல. அந்த உணவுப்பொருள் நம் உடலுக்கு எண்ணற்ற பல நன்மைகளையும் தருகிறது. உணவின் அந்த உண்மைத்தன்மையை சிறிதேனும் நாம் அறிந்துகொண்டோமானால் உடல்நலத்தில் குறையேதும் இல்லாமல் நம்மைக் காத்துக் கொள்ள இயலும். உணவே மருந்தாகி உதவும் வகையிலும் நாம் வாழ இயலும்.

அந்தவகையில் நாம் சுவையாக விரும்பிச் சாப்பிடக்கூடிய உருைளக்கிழங்கு எப்படி நமக்குப் பயன் தருகிறது என்பதை தெரிந்து கொள்வோம். உருண்டை வடிவத்தைப் பெற்றிருப்பதால் இதற்கு உருைளக்கிழங்கு என பெயர் வைத்தார்கள் நம்மவர்கள். Solanum tuberosum என்பது இதனது தாவரப் பெயர் ஆகும். Potato என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.

வருடந்தோறும் தோண்டி எடுத்தாலும் இதன் வேர் மட்டும் இரண்டு வருடங்கள் வரை பலன் தரத்தக்கது ஆகும். இதன் அடித்தண்டு 3 அடி உயரம் வரையிலும் வளரும். இதன் பூக்கள் ஒன்றரை அங்குல அளவு வரை வெண்மை அல்லது ஊதா நிறம் கொண்டவையாக இருக்கும். உருைளயினுடைய இலைகள் சற்று மயக்கம் தரும் தன்மையுடையவை. இதன் தண்டின் கணுவைச் சுத்தம் செய்து, அதிலிருந்து கூழ்ப்பசை போன்ற சத்தினை எடுத்துப் புளிக்க வைத்து, அதன்பின்பு காய்ச்சி சர்க்கரை தயாரிக்கும் வழக்கம் உண்டு.

உருைளக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் வாத ரோகம், ஆமவாதம் என்கிற கீல் வாயு முதலியன தீரும் என பர்மா முதலிய பிரதேசங்களில் கருதப்படுகிறது. உருைளக்கிழங்கின் சாறு வாதத்தைக் கண்டிக்கும் என்பது நவீன ஆய்வாளர்களின் கருத்து ஆகும். எனவே, பச்சை உருைளக்கிழங்கை இயந்திரத்தில் இட்டுப் பிழிந்து அதிலிருக்கும் மாவுச்சத்தை நீக்கிய பிறகு காய்ச்சி அதிலிருந்து மருந்து செய்து, முழங்காலில் உண்டாகும் நரித்தலை வாதத்துக்கும், கீல் வாயுவுக்கும் கொடுப்பார்கள்.

உருளைக்கிழங்கின் தைலத்தை வெந்நீரில் கலந்து நசுக்குண்ட அல்லது வேறு ஏதேனும் வகையில் காயமுற்ற உறுப்புகளின் மேலாக ஒத்தடம் கொடுக்க குணம் உண்டாகும். உருைளக்கிழங்கும் அதன் இலைகளும்கூட நமக்கு மருந்தாகிப் பயன் தருகின்றன. உருைளக்கிழங்கின் இலை இசிவு(வலிப்பு) நோயை அகற்றக்கூடியது, மலத்தை இளக்கக்கூடியது, சிறந்த சிறுநீர் பெருக்கி, உருளைக்கிழங்கு நல்ல பால்பெருக்கி, சிறந்த நரம்பு வெப்பு அகற்றி.உருளைக்கிழங்கால் உடல் எடை குறைகிறது. சர்க்கரை நோய்க்கும் துணை மருந்தாகிறது.

வயிற்றுக் கோளாறுகள் வயிற்றுப் புண்களையும் உருளை போக்கக் கூடியது, மலச்சிக்கலை மறையச் செய்வது.உருைளக் கிழங்கை வெந்நீரில் அரைத்தும் சாறு பிழிந்தும் காயத்துக்கும், தீச்சுட்ட புண்களுக்கும், மேற்பூச்சாகப் பூசலாம். இதில் கருச்சத்தும், கஞ்சிப் பசையும் அதிகம் இருப்பதால் உடலுக்கு பலத்தையும், கொழுப்பையும் கொடுக்கும். எனினும் சர்க்கரையையும் உண்டு பண்ணும் வாய்ப்பு இருப்பதால் அளவு தாண்டி பயன்படுத்தக் கூடாது.
உருைளக்கிழங்கு உன்னதமான மருத்துவ குணங்களை உடையது எனினும் விடாமல் பல நாட்கள் உபயோகப்படுத்துவதால் உடல் வலிவும் புத்தி வன்மையும் மந்தப்படும் என்பதை உணர்ந்து அளவோடு பயன்படுத்தல் வேண்டும்.

100 கிராம் பச்சை உருைளக்கிழங்கில் பொதிந்துள்ள சத்துக்கள்

எரிசக்தி(எனர்ஜி) - 77 கலோரி, மாவுச்சத்து - 17.47 கி., ஸ்டார்ச் - 15.44 கி., நார்ச்சத்து - 2.2 கி., கொழுப்பு - 0.1 கி., புரதச்சத்து - 2 கி, ஆகியவற்றோடு வைட்டமின்களான தயாமின்(பி1) - 0.08 மி.கி., ரிபோஃப்ளேவின்(பி2) - 0.03 மி.கி., நியாசின்(பி3) - 1.05 மி.கி., பேண்டோதெனிக் அமிலம்(பி5) - 0.296 மி.கி., வைட்டமின் பி6 - 0.295 மி.கி., ஃபோலேட்ஸ்(பி9) - 16 மை.கி., வைட்டமின் சி - 19.7 மி.கி., வைட்டமின் ஈ - 0.01 மி.கி., வைட்டமின் கே - 1.9 மை.கி., ஆகியவையும், உலோகப் பொருட்களான சுண்ணாம்புச்சத்து - 12 மி.கி., இரும்புச்சத்து - 0.78 மி.கி., மெக்னீசியம் - 23 மி.கி., மேங்கனீசு - 0.153 மி.கி., பாஸ்பரஸ் - 57 மி.கி., பொட்டாசியம் - 42 மி.கி., சோடியம்(உப்பு) - 6 மி.கி., துத்தநாகம் - 0.29 மி.கி., ஆகியவையும் நீர்ச்சத்து 75 கிராமும் அடங்கியுள்ளது.

உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்து குடலுக்கு இதம்தந்து மலச்சிக்கலை மறையச் செய்யும் நார்ச்சத்து போன்ற செயலை உடையது. இது மலத்தை உறையச் செய்கிறது. மலத்தை வெளித்தள்ள உதவுவதால் மலக்குடலில் ஏற்படும் புற்றுேநாய்க்கு தடை போடுகிறது. ரத்தத்தில் சேரும் கொழுப்புச்சத்தை(Plasma cholestrol) குறைக்கிறது. டிரைகிளிசராய்ட்ஸ் எனும் இதய ரத்த நாளங்களுக்கு ஊறு செய்யும் கொழுப்புச் ேசர்வதையும் உருளை தவிர்க்கச் செய்கிறது.

உருளைக்கிழங்கு  மருந்தாகும் விதம்

* பச்சை உருளைக்கிழங்கை அரைத்து மேற்பற்றாகப் போடுவதால் தீக்காயங்கள், தீக் கொப்புளங்கள், பனி வெடிப்பு, பாதத்தின் குதிக்காலில் தோன்றும் வெடிப்பு, புண்கள், கண் இமைகளின் கீழ் தோன்றும் வீக்கங்கள் ஆகியன குணமாகும்.

* பச்சை உருளைக்கிழங்குகை தோலுடன் சிறுசிறு துண்டுகளாக்கி உடன் சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து அதைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வருவதால் முகம் பளபளப்படையும். முகச்சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்துபோகும். இளமையான தோற்றம் கிடைக்கும்.

* பச்சை உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி மிக்ஸியில் இட்டு அரைத்து பசையாக்கி, தோலில் தீக்காயங்கள் பட்ட உடன் மேற்பூச்சாகப் போட காயம் பட்ட வடு தெரியாமல் விரைவில் ஆறிவிடும்.

* உருளைக்கிழங்கை இரு துண்டுகளாக குறுக்கே வெட்டி அதன் சதைப்பகுதியை நெற்றிப் பொட்டுகளின் இருபுறமும் சற்று மென்மையாக அழுத்தித் தேய்ப்பதால் தலைவலி குணமாகும். குறிப்பாக மன உளைச்சலால் வருகிற தலைவலி தணியும்.

*உருளைக்கிழங்கைப் போதிய அளவு வில்லையாகத் துண்டித்து, இரண்டு கண்களின் மேலும் வைத்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்களில் ஏற்படும் சோர்வு காணாமல் போகும்.

* வயிற்றில் சுரக்கும் அமிலம்(Acidity) இரவு நேரத்தில் நம் தூக்கத்தைக் கெடுக்கக்கூடியதாக இருக்கும். இதுபோன்ற வயிற்று எரிச்சல், வயிற்று உப்புசம் உடையவர்கள் நன்கு வேக வைத்து மசித்த ஒரு உருைளக்கிழங்கைச் சூடான பாலுடன் சேர்த்து பருகுவதால் அமிலச் சுரப்பு மட்டுப்பட்டு அமைதியான தூக்கம் கிடைக்கும்.

* உருளையில் மிகுந்துள்ள சத்துக்களோடு டேனின்ஸ் ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் ஆல்கலாய்ட்ஸ் ஆகியனவும் மிகுதியாக அடங்கியுள்ளன. இவற்றில் டேனின் என்னும் சத்துப்பொருள் வற்ற வைக்கும் தன்மை உடையது. இதனால் வயிற்றுப்போக்கு தவிர்க்கப்படுவதோடு குணப்படுத்தவும் இயலுகிறது.

*  உருளைக்கிழங்கின் வேகவைத்த நீரைப் பருகுவதால் மூட்டு வலிகள், வாத வீக்கம் ஆகியன குணமாகிறது என சமீபகால ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

* உருளைக்கிழங்கு வேகவைத்த நீரில் பொதிந்திருக்கும் பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரைட் ஆகிய சத்துக்கள் சருமத்துக்கு ஆரோக்கியம் தருவதோடு மிக்க பொலிவையும் தருகிறது. இத்துடன் மேற்பூச்சாக உருளையின் வேகவைத்த நீரைப் பூசுவதால் சருமத்தின் இறந்த செல்கள் அகற்றப்பட்டு, புதிய செல்கள் வளரச் செய்யும் வாய்ப்பு உண்டாகும். பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவையும் காணாமல் போகும்.

* உருளைக்கிழங்கின் சாறு பருகுவதனாலும், மேற்பற்றாகப் போடுவதனாலும் கண்களின் கீழே நீர் கோர்த்துக் கொண்டு நீர்ப்பை போல தோன்றுகிற வீக்கம் வற்றிப் போகும். கண்களுக்குக் குளிர்ச்சியும் புத்துணர்வும் ஏற்படும்.

*  வைட்டமின் சி சத்துக்குறைபாட்டால் ஏற்படும் ஸ்கர்வி நோய்க்கு உருளைக்கிழங்கு மிகச் சிறந்த தீர்வு ஆகும். இதனால் ஈறுகளிலிருந்து எளிதில்
ரத்தம் வெளியேறுதல் அல்லது எங்கேனும் அடிபட்டபோது அதிக ரத்தப்போக்கு ஆகியன தவிர்க்கப்படும்.

* ஒவ்வொரு வேளையும் உணவு உண்பதற்கு முன்பாக பச்சை உருைளக்கிழங்கு சாறு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு பருகிவிட்டு சாப்பிடுவதால் வயிற்றில் தோன்றும் அமிலச் சுரப்பு தவிர்க்கப்படும். மேலும் மூட்டு வலியினை விரட்டுவதாகவும் உருளைக்கிழங்கு சாறு அமைகிறது.

* உருைளக்கிழங்கு தோலைக் கொண்டு நீர் செய்து சாப்பிடுவதால் பித்தப்பை சம்பந்தமான தொல்லைகள் நீங்கி, ஈரல் பலப்படுவதுடன் உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad