Type Here to Get Search Results !

சீனாவில் கண்டறியப்பட்ட இறகுகள் கொண்ட டைனோசர் குட்டிகள்




சீனா, தென் கொரியா, மங்கோலியா மற்றும் வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட டைனோசரின் முட்டைகளின்படி பெய்பெய்லாங் இன டைனோசர்கள் சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் குட்டிகளின் எலும்பு படிமங்கள், இறகுகள் கொண்ட புதிய டைனோசர் இனமாக அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது .

`பேபி லூயி` என்று பெயர் சூட்டப்பட்ட, முட்டையிலிருந்து வந்த அந்த டைனோசர் குட்டி டைனோசர் முட்டைகள் அடங்கிய கூட்டிற்குள் இருந்து எடுக்கப்பட்டது.

இந்த டைனோசர் குட்டி,` பெய்பெய்லாங் சினென்சிஸ்` அதாவது சீனாவின் `பேபி டிராகன்` என்று புதை படிமங்களின் நிபுணர்களால் அழைக்கப்படுகிறது.

இறகுகள் கொண்ட டைனோசர் இனத்தைச் சேர்ந்த பறவை போல் தோற்றம் அளிக்கும் பிரமாண்ட டைனோசர் இனத்தில் கண்டறியப்பட்ட முதல் படிமம் இது என்று தெரிவிக்கின்றனர்.

அந்த டைனோசரின் புதைபடிவம் சிறியதாக இருந்தாலும் அது 1,000 கிலோ எடை வரை வளர்ந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

சீனா, தென் கொரியா, மங்கோலியா மற்றும் வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட டைனோசரின் முட்டைகளின்படி பெய்பெய்லாங் இன டைனோசர்கள் சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"பரவலான இடங்களில், அதிகளவில் கிடைத்த இந்த டைனோசர் முட்டைகளின் படிமங்கள், இறகுகள் கொண்ட மிகப்பெரிய டைனோசர் இனம் அதிகமாக காணப்பட்டது என்பதை தெரியப்படுத்துகிறது; மேலும் இதன் எலும்புகூடுகள் பெரியளவில் கிடைக்கவில்லை என்றாலும் பல பிராந்தியங்களில் இன்னும் கண்டறியப்படவில்லை என்ற போதிலும் லேட் க்ரிடாஷியஸின் பிற்கால பகுதிகளில் இவை பரவலாக வாழ்ந்திருக்கும் என பத்திரிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

1980களின் கடைசி பகுதி மற்றும் 1990களின் ஆரம்ப பகுதிகளில், உள்ளூர் விவசாயிகளால் ஹெனான் மற்றும் சீனாவில் உள்ள பாறைகளில் ஆயிரக்கணக்கான டைனோசர் முட்டைகள் சேகரிக்கப்பட்டது.

அதில் மாதிரி படிமங்கள் உட்பட சில முட்டைகள் அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டது.

பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்பகுதிக்காக படம்பிடிக்கப்பட்ட பிறகு அந்த டைனோசர் குட்டியின் எலும்புக்கூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அது `பேபி லூயி` என்று அழைக்கப்பட்டது.

பிறகு அந்த புதைபடிமம் 2013 ஆம் ஆண்டு சீனாவிற்கு கொண்டு வரப்பட்டு தற்போது அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

முன்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட டைனோசர் இனத்துடன் இந்த படிமத்தை சீனா மற்றும் கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒப்பிட்டு இது ஒரு புதிய இனம் என்று கண்டறிந்துள்ளனர்.

ஈடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த ஆய்வு குறித்து பேசுகையில், பெரிய, விசித்திரமான டைனோசர்கள் எவ்வாறு இனப்பெருக்கம் செய்தது என்ற சிறிய கண்ணோட்டத்தை இந்த ஆய்வு தருகிறது என தெரிவித்தார்.

"இந்த சிறிய கருமுட்டைகள் ஒரு டன் இறகுகள் கொண்ட பெரிய பறவையை போன்ற தோற்றமாக மாறும் என்பதை கற்பனை செய்து பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது."

"இவை அனைத்தும் இறகுகள், அலகுகள் என கொண்டு, பற்கள் இல்லாமல் பார்க்க விசித்திரமாக இருக்கும்." என தெரிவித்தார்.

இந்த டைனோசர் குட்டி, கினிப்பன்னியின் எடையில்தான் இருக்கும்.

இருப்பினும் இந்த முட்டைகளிலிருந்து 1,000கிலோ எடை கொண்ட வளர்ந்த டைனோசர்கள் வெளி வரும் என முந்தைய ஆய்வு தெரிவிக்கிறது.

புதைபடிமத்துடன் கண்டறியப்பட்ட முட்டைகள்தான் இதுவரை கண்டுடெடுக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் முட்டைகள் ஆகும்.

இறகுகள் கொண்ட மிகப்பெரிய டைனோசர்கள் க்ரிடாஷியஸ் காலத்தில் அதிகமாக வாழ்ந்ததாக புதைபடிம பதிவுகள் மூலம் தெரிய வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad