மலிங்கா ஹேர் ஸ்டைல் இருக்கே... மஸ்கட் ரசிகையின் ஆசை!




மும்பை இண்டியன்ஸ் அணி வீரர்களை ஆக்ரோஷமாக வரைந்து அவர்களுக்கே பரிசளித்திருக்கிறார் ரசிகை மாளவிகா.

இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட இவர், தற்போது வசிப்பது மஸ்கட்டில். மும்பைக்கு நேற்று வந்த இவர், வான்கடே ஸ்டேடியத்தில் தனக்குப் பிடித்த மும்பை இண்டியன்ஸ் வீரர்களை சந்தித்தார். ஹர்திக் பாண்டியா, பும்ரா, ரோகித் ஷர்மா, மலிங்கா ஆகியோர்களிடம் தான் வரைந்த ஓவியங்களை பரிசளித்தார். அந்த ஓவியங்களில் ஒவ்வொருவரும் ஆக்ரோஷமாக இருக்கின்றனர்.

’மலிங்காவின் ஹேர் ஸ்டைல் இருக்கே... அவ்வளவு அழகு’ என்று ஆச்சரியப்படும் மாளவிகா, புனேவில் படித்தவர். ‘எல்லா கிரிக்கெட் வீரர்களும் நான் வழங்கிய ஓவியங்களை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தனர். இதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் தெரிவித்தனர்’ என்ற மாளவிகாவிடம், ரொம்ப ரசித்து வரைந்த ஓவியம் யாருடையது என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில், ’ஹர்திக் பாண்டியா’.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url