சென்னை கோடம்பாக்கத்தில் ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: பாஜக பிரமுகரிடம் போலீசார் விசாரணை




சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே பாஜக பிரமுகர் தண்டபாணி என்பவருக்கு சொந்தமான துணிக்கடை உள்ளது. இங்கு காவல்துறையை சேர்ந்தவர்களுக்கான சீருடைகள் தயாரித்து கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த கடையில் ரூ.45 கோடி மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அந்த கடையில் சோதனை நடத்தியபோது கட்டுகட்டாக கிட்டத்தட்ட ரூ.45 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த கடையின் உரிமையாளரும், பாஜக பிரமுகருமான தண்டபாணியிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவிலே யாரிடமிருந்து பணத்தை வாங்கினார், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்வதற்காக பணத்தை மாற்றிக் கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தாரா என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிந்த பிறகு பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்துமே வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url