Type Here to Get Search Results !

கொச்சி மெட்ரோ ரயில் பணிகளில் 23 திருநங்கைகளுக்கு வாய்ப்பு



கேரளாவில் கொச்சி மெட்ரோ சேவையில் முதல் முறையாக 23 திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திருநங்கைகளுக்கு வேலை வழங்குவதில் கேரள அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது பராமரிப்பாளர்கள் முதல் டிக்கெட் கவுண்டர் வரை அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப பலவேறு பணிகளை திருநங்கைகளுக்கு வழங்கயிருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது .

கொச்சி மெட்ரோ ரயில் சேவையில், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகப் பணியில் கூடுதலாக 23 திருநங்கைகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

 நாளை முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் பயணம்.. 02:49 திருநங்கைகள் தினவிழா கொண்டாட்டம்-வீடியோ.. 01:11 திருநங்கைகள் அழகி போட்டி விழா-வீடியோ.. மெட்ரோ ரயில் சேவை கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய நகரான கொச்சியில் மெட்ரோ ரெயில் திட்டம் கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், வெகுவிரைவில் ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலைவாய்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இதில், 23 இடங்கள் திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலைய துப்புரவுப்பணி, பயணச்சீட்டு வழங்குதல் போன்ற பணிகள் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.   திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் திருநங்கைகளுக்கு சமூகத்தில் முக்கியத்துவம் அளிக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருநங்கைகளுக்கு பணி மெட்ரோ நிறுவனம் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புகளில் சரியான பங்கைக் கொடுக்க விரும்புகிறது.

டிக்கெட் வழங்குவது முதல் துப்பரவு வரையிலான பணிகளுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யபடுவர் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகுபாடு கிடையாது ரயில் நிலையங்களில் பணிபுரியும் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையே பணிகளில் எந்த பாகுபாடும் அளிக்கப்படமாட்டாது என்று கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் எலியாஸ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அவர்களுக்கு முக்கியமான ஒன்று. இந்த முதல் முயற்சி வெற்றிகரமாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். மற்ற நிறுவனங்களும் இதே போல மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலே முதல் முறை திருநங்கைகளை ஊழியர்களாகப் பணியில் அமர்த்துவதில் கேரளா மெட்ரோ சேவை நிர்வாகம் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad