Type Here to Get Search Results !

ஐ.பி.எல் டி20 : குஜராத் லயன்ஸை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி



கான்பூர்: ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ஷிரியாஸ் ஐயர் 57 பந்துகளில் 96 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் களமிறங்கிய அமித் மிஸ்ரா 2 பந்துகளில் இரண்டு 8 ரன்களை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad