ஹைதராபாத்துடன் இன்று மோதல்: மீண்டுவருமா பெங்களூரு அணி

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பிய னான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க ளூரு அணியுடன் மோதுகிறது.

பெங்களூரு அணி 7 ஆட்டத்தில் 2 வெற்றி, 5 தோல்விகளுடன்
புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிராக 49 ரன்களில் சுருண்டு அவமானகரமான தோல்வியை சந்தித்தது.

அணியில் உள்ள எந்த ஒரு பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க எண்ணை கூட எட்டாமல் கொல்கத்தா அணியின் வேகப்பந்து
வீச்சிடம்
ஒட்டுமொத்தமாக சரணடைந்தனர். 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள பெங்களூரு அணி தொடரின் 2-வது கட்ட பாதியில் அடியெடுத்து வைக்கிறது.

அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தால் மட்டுமே அடுத்த சுற்றுக் கான வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அணியின் ‘பிக் 3’ என வர்ணிக்கப்படும் விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ் ஆகியோர் முறையே 154, 144, 145 ரன்கள் சேர்த்துள்ளனர்.

இவர்கள் ஒருசேர சிறந்த திறனை வெளிப்படுத்தாதது அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. நம்பிக்கை அளிக்கும் வீரராக கருதப்பட்ட கேதார் ஜாதவிடம் இருந்து பெரிய அளவிலான ரன்குவிப்பு நிகழவில்லை. அவர் 7 ஆட்டங்களில் 175 ரன்களே சேர்த்துள்ளார்.

மேலும் திறன் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளருக்கு எதிராக கேதார் ஜாதவ் எளிதாக தனது விக்கெட்டை இழந்து விடுகிறார். இந்திய வீரர்களான மன்தீப் சிங், பவன் நெகி ஆகியோரும் பேட்டிங்கில் சோபிக்காமலேயே உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் ஒட்டுமொத்த பேட்டிங்கும் எழுச்சி கண்டால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

ஹைதராபாத் அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்விகள் பெற்றுள்ளது. கடைசியாக புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. தொடக்க வீரர்களான வார்னர் 235, ஷிகர் தவண் 282, ஆல்ரவுண்டரான ஹென்ரிக்ஸ் 193 ரன்களும் சேர்த்துள்ளனர்.

டெல்லி அணிக்கு எதிராக 51 பந்துகளில் 89 ரன்கள் விளாசிய வில்லியம்சன், புனே அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 14 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து விரைவாக ஆட்டமிழந்தார். அவரிடம் இருந்து இன்று சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். கடந்த ஆட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக விளையாடாத யுவராஜ் சிங் இன்று களமிறங்க உள்ளார்.

அவர் இதுவரை 6 ஆட்டத்தில் 96 ரன்களே சேர்த்துள்ளார். முதல் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த அவர் அதன் பின்னர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். இதனால் ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பந்து வீச்சில் 16 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள புவனேஷ்வர் குமார் பலமாக உள்ளார். சுழற்பந்து வீச்சில் ரஷித்கான் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதுடன் விக்கெட்களும் கைப்பற்றுகிறார். அவர் இதுவரை 10 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளரான சித்தார்த் கவுல் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அணிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

இடம்: பெங்களூரு

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url