தோனியிடமிருந்து ஸ்மித் ஆலோசனைகளைப் பெற்றார்
ஐபிஎல் கிரிக்கெட்டில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ஸ்மித், முந்தைய கேப்டன் எம்.எஸ்.தோனியிடமிருந்து ஆலோசனை பெற்றதாக அஜிங்கிய ரஹானே தெரிவித்தார். ஆட்டம் முடிந்த பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் ரஹானே கூறியதாவது: ஸ்மித் கேப்டன்சி குறித்து இப்போதைக்கு அறுதியிட முடியாது. அவர் தோனியிடமிருந்து நிறைய ஆலோசனைகள் பெற்று வருகிறார். இனி வரும் போட்டிகளிலும் அவர் தோனியின் ஆலோசனைகளைப் பெறுவார் என்றே நினைக்கிறேன், ஸ்மித் ஆஸ்திரேலியாவுக்காக அபாரமாக கேப்டன்சி செய்து வருபவர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் என்னைப்பொறுத்தவரை தோனிதான் உலகத்தரம் வாய்ந்த ஒரு லீடர். எப்படியிருந்தாலும் தோனியின் உதவியுடன் ஸ்மித் இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்படுவார் என்பது உறுதி. இவ்வாறு கூறினார் ரஹானே