வீட்டில் பற்றிய எரிந்த தீ மூன்றாவது மாடியிலிருந்து குதித்த கமல்ஹாசன்
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் கலைஞன் உலகநாயகன் கமல்ஹாசன். எப்போதும் பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத இவருக்கு கடந்த சில நாட்களாகவே மிகவும் மோசமான காலகட்டமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தான் வீட்டில் தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. கவுதமியை வேறு பிரிந்தார். இந்நிலையில் இரவு இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாம். இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதில், அவரது பணியாளர்களுக்கு நன்றி, தீ விபத்தில் இருந்து தப்பி விட்டோம், மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து விட்டேன். நலமாக இருக்கிறேன், யாருக்கும் காயமில்லை, இரவு வணக்கம் என்று கூறியுள்ளார்.