ரஜினிகாந்த் டூப்பாக வந்து தூள் கிளப்பிய நளினிகாந்த் என்ன ஆனாரு
நளினிகாந்தை ஞாபகம் இருக்கா? ரஜினியின் ஆரம்ப காலங்களில் ரஜினியைப் போலவே இருக்கும் நளினிகாந்தும் ஓரளவு பிரபலம்தான். இடையில் பல வருடங்களாக ஆளையே காணோம். அண்மையில் ஹிட்டடித்த ‘யாமிருக்க பயமேன்’ படத்தில் ஃபிரைடு ரைஸ் திருடனாக வந்து ‘யார் இந்தக் கிழவர்?’ என கேட்க வைத்தார். நளினிகாந்த். அவரே சொல்றாரு கேளுங்க.. நான் இங்கேயேதான் இருக்கேன். 15 வருஷத்துக்கு முன்னாலேயே நடிக்கிறதை நிறுத்திட்டு சீரியல் பக்கம் போயிட்டேன். ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி’, ‘எங்க முதலாளி’னு ரெண்டு படங்கள் ஒரே நேரத்துல நடிச்சேன். அதுதான் கடைசியா நான் பண்ணின படங்கள். காவேரி, சுயரூபம், புதிய வாழ்க்கை, புதிய பாரதம்னு நாலு தமிழ் சீரியல்களும் மூணு தெலுங்கு சீரியல்களையும் ப்ரைம் டைம்ல தயாரிச்சேன். அஸ்வினி, சுதா சந்திரன், இளவரசினு பல முன்னாள் பாப்புலர் நடிகைகளை கன்வின்ஸ் பண்ணி சீரியல்களுக்கு கூட்டிட்டு வந்தது நான்தான். சினிமா மேல வருத்தம் எதுவும் இல்லை. ஆனா, ஏனோ எனக்கு நிப்பாட்டிக்கணும்னு தோணுச்சு. ஆனா, சீரியல்ல சிலபேரை நம்பி 50 லட்ச ரூபாய் நஷ்டமாச்சு. அதோட பசங்க தலை எடுக்கட்டுமேனு ஒதுங்கி வாழ ஆரம்பிச்சுட்டேன். இப்போ என் மகன் ராம், ‘சிம்கார்டு’னு ஒரு படத்துல ஹீரோவா நடிக்கிறான். ”ரஜினியோட வளர்ச்சியைப் பார்த்து எனக்கு நானே இந்தப் பேர் வெச்சுக்கலை என்பதுதான் நிஜம். அது ரஜினிக்கும் தெரியும். ‘நீங்க எனக்கு சீனியர்னு தெரியும்’னு அவரே என்கிட்ட சொல்லி இருக்கார். அவருக்கு கொடுப்பினை அப்படி இருந்தது. எனக்குக் கொடுப்பினை இப்படி. கடவுள் எனக்கு விதிச்சது இவ்ளோதான் என்பதை நான் பெருந்தன்மையா ஏத்துக்கிறேன்” என்கிறார் சிரித்தபடி..!