காஷ்மீரில் கிரிக்கெட் வீரர்கள் அதிரடி கைது
இந்தியாவின் எல்லை பகுதியான காஷ்மீரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உடையை அணிந்து, அந்நாட்டு தேசிய கீதம் பாடிய கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள கல்முலே இச்சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள காஷ்மீர் கிரிக்கெட் கிளப் உறுப்பினர்கள், கடந்த 2ம் திகதி கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது, அதில் பங்கேற்ற வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அணியும் உடையை அணிந்து ஆட்டத்தில் பங்கேற்றனர். ஆட்டம் தொடங்கும் முன் பாகிஸ்தான் தேசிய கீதத்தையும் பாடியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. இதையடுத்து அந்த வீரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்