ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கியது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கட்டாயம் ஆக்க கூடாது என உத்தரவிட்டும் ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கியது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
மத்திய, மாநில அரசுக்கள் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்கி வருகின்றன. கட்டாயம் ஆக்கப்படுவதற்கு எதிராக கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்படும் போது கட்டாயம் ஆக்கப்பட கூடாது என உத்தரவிடப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டும் ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்க கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வருகிறது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு ஓய்வூதிய (இபிஎப்) திட்டத்துக்கு ஆதார் கட்டாயம், ஓட்டுநர் உரிமம் பெற ஆதார் கட்டாயம், புதிய வாகனங்களை பதிவு செய்ய ஆதார் கட்டாயம், செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கட்டாயம் என தொடர்ச்சியாக கட்டாயம் ஆக்கப்பட்ட அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. வருமான வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை சார்பில் நிரந்தர கணக்கு எண் (பான்) அளிக்கப்படுகிறது. பழைய பான் கார்டுடன் ஆதார் இணைப்பு மற்றும் புதிய ஆதார் கார்டு பெற ஆதார் கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.