சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் ரூ. 4 இலட்சம் மின் கட்டணம் நிலுவை
புதிதாக பதவியேற்ற உ.பி பாஜக அரசு பதவியேற்ற ஒரு மாதத்தில் பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எடாவா;
அந்த வரிசையில் அடுத்த அதிரடியாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் எடாவா பங்களாவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட தினசரி 5 கிலோ வாட்ஸ் மின் அளவை விட 8 மடங்கு அதிகமான மின்சாரத்தை நுகர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு மின் வாரிய அதிகாரிகள் 40 கிலோ வாட்ஸ் மீட்டர் ஒன்றை பொருத்திவிட்டு சென்றனர். அத்துடன் இதுவரை பயன்படுத்திய மின்சாரத்திற்கு ரூ. 4 இலட்சத்தைக் கட்ட வேண்டும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றனர்.
இம்மாதம் இறுதிக்குள் கட்டண நிலுவையை கட்டும்படி சொல்லிவிட்டுச் சென்றனர். சோதனை செய்த அதிகாரி மின் திருட்டு உட்பட பல மின் நுகர்வு அத்துமீறல்களை கண்காணிக்க இருப்பதாக கூறினார். இதற்கு முன் ஏன் இப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேட்டபோது எங்களிடம் 40 கிலோ வாட்ஸ் மீட்டர்கள் கைவசம் இல்லை என்று பதிலளித்தார்.
ஒரு மாதத்திற்கு முன்பு பதவியேற்ற யோகி ஆதித்யநாத் அரசு ஊழலை முற்றிலுமாக ஒழிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசு அனைவருக்குமான மின்சாரம் எனும் திட்டத்தில் சேர்ந்துள்ளது. மத்திய அரசின் சார்பில் நடைமுறைக்குள்ளாகும் இந்த திட்டத்தின்படி அனைத்து வீடுகளிலும் மின் மீட்டர் பொருத்தப்படும்.