100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற 101 வயது பாட்டி
மான் கவுர்;
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் உலக மாஸ்டர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த 101 வயதான மூதாட்டி மான் கவுர் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற அவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 14 விநாடிகளில் கடந்தார். தங்கப் பதக்கம் வென்ற அவரை நியூஸிலாந்து ஊடகங்கள் சண்டிகரில் இருந்து ஒரு அதிசயம் என புகழ்ந்துள்ளன.
100 மீட்டர் ஓட்டத்தை தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டம், 2 கிலோ எடை உள்ள குண்டு எறிதல், 400 கிராம் எடை கொண்ட ஈட்டி எறிதல் போட்டியிலும் கலந்து கொள்ள மான் கவுர் திட்டமிட்டுள்ளார்.
மான் கவுர் கூறும்போது, “ இந்த பந்தயத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக் கிறது. நான் மீண்டும் ஓடுவேன். போட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்தப்போவ தில்லை. எனக்கு முற்றுப்புள்ளி இல்லை” என்றார்.