Type Here to Get Search Results !

ஐ.பி.எல் டி-20 : மும்பை இந்தியன்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது புனே




மும்பை: ஐ.பி.எல் டி20 சீசன் 10 இன்றைய லீக் போட்டியில் புனேஅணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.  முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய புனே சூப்பர்ஜெயின்ட் ரைசிங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. புனே அணியின் சார்பில் ராகுல் த்ரிபதி அதிகபட்சமாக 31 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். ரகானே 32 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். தோனி 11 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னா் 161 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணியிடம் தோல்வியுற்றது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad