Type Here to Get Search Results !

கோலியின் ஆக்ரோஷத்தை தடுக்க விரும்பவில்லை அனில் கும்ப்ளே கருத்து





ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத் துவதற்கான அவசியம் தேவை இல்லை என பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக ராஞ்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:  வீரர்களின் இயற்கையான உள்ளுணர்வுகளை கட்டுப்படுத்த நான் விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொரு வீரரும் தனது சொந்த வழியிலேயே ஆட்டத்தை அணுகுகின்றனர்.  இது முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடர். தற்போது தொடர் 1-1 என்ற நிலையில் உள்ளது. இரு அணிகளுமே ராஞ்சி போட்டியில் கடினமாக விளையாடும். கிரிக்கெட்தான் வெற்றியாளர் என்பதை உறுதியாக கூறுவேன்.  விளையாட்டில் மீண்டும் கவனம் செலுத்துவது என்பது மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். டிஆர்எஸ் சர்ச்சை விவகாரத்தில் பிசிசிஐ முதிர்ச்சி தன்மையுடன் நடந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆஸ்தி ரேலிய வாரியத்தை உடனே அழைத்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதுடன் கூட்டறிக்கை வெளி யிட்டு, பெங்களூரு சம்பவத்தில் இருந்து நகர்ந்து செல்ல தேவை யான நடவடிக்கையை எடுத்தது.  முதல் டெஸ்ட்டில் தோல்வி யடைந்த நிலையில் அதில் இருந்து மீண்டு வந்தது அருமையான விஷயம். இது சிறந்த வெகுமதி யாகவும் இருந்தது. ராஞ்சி போட்டிக்கு முன்னதாக விராட் கோலியும், ஸ்மித்தும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவார்கள்.  டிஆர்எஸ் சர்ச்சையாலோ, ஆடுகளம் தொடர்பான கருத்துக்களாலோ எங்களது அணியின் திறன் எந்த வகையிலும் பாதிக்காது. தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இது சிறப்பான விஷயம். மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இருந்து பல மைல்கல் சாதனைகள் உள்ளன. அனைத்து தொடர்களையும் வென்றுள்ளோம். விராட் கோலி 4 முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.  அஸ்வின் 250 விக்கெட்களை விரைவாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்படு கின்றனர். நீண்ட காலமாக சிறப்பாக செயல்படுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆட்டம் என்பது தனிப்பட்ட வீரரை சார்ந்தது இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளையும் சிறந்த வழியில் முடிக்க விரும்புகிறோம். இரு ஆட்டத்திலும் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.  வேகப் பந்து வீச்சில் உமேஷ் யாதவ் நன்கு முதிர்ச்சியடைந்துள் ளார். அவர் தனது சிறப்பான செயல்பட்டால் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கிறார். அஸ்வின், ஜடேஜா ஆகியோர் செயல்படும் விதமும் மகிழ்ச்சியாக உள்ளது.  இவ்வாறு அனில் கும்ப்ளே கூறினார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad