எங்கே சென்றார் சுசித்ரா, என்ன ஆனது அவருக்கு
சுசித்ரா இந்த பெயர் தான் சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் செம்ம ஹாட். சுசிலீக்ஸ் என நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியே வந்தது. இவருடைய ஐடி ஹாக் செய்யப்பட்டுவிட்டதாக அவரே கூறினார், ஆனால், அவருடைய கணவர் சுசி சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்றார். இதை தொடர்ந்து சுசி தன் டுவிட்டரை அக்கவுண்டை முடக்கினார், தற்போது சுசி எங்கே இருக்கின்றார், அவருக்கு என்ன ஆனது என்பது தான் பலரின் கேள்வியும். சுசி தற்போது வரை எங்கு இருக்கின்றார் என யாருக்கும் தெரியவில்லை, பத்திரிக்கையாளர்கள் பலரும் தொடர்புக்கொண்டும் அவர் போன் எடுக்கவில்லையாம். இதனால், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அவர் தலைமறைவா அல்லது கடத்தலா? என்பது குழப்பம் தான்.