இளம் வயதில் கர்ப்பமாகும் அக்ஷரா ஹாசன்
கமலின் இரண்டு மகள்களும் சினிமாவில் கலக்கி வருகின்றனர். ஏற்கனவே ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். தற்போது அக்ஷரா ஹாசனும் அஜித்தின் விவேகம் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் நடிப்பில் இன்னும் சில வாரங்களில் ஒரு ஹிந்திப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் இவர் இளம் வயதிலேயே கர்ப்பமாகும் பெண்ணாக நடித்துள்ளார், இதுக்குறித்து இவர் கூறுகையில் இது சவாலான கேரக்டர். மனதளவில் சில விஷயங்களில் நம் நாடு முன்னேற வேண்டும். அதற்கான விழிப்புணர்வாக இந்த படம் இருக்கும் என்பதால் நடிக்க சம்மதித்தேன்’ என தெரிவித்துள்ளார்.