இலங்கை அணியை கதிகலங்க வைத்த வங்கதேச வீரர்




இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வங்கதேச வீரர் டஸ்கின் அகமது ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.  வங்கதேசம் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள்  குவித்தது.  இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் சதம் கடந்து 102 ரன்கள்  குவித்தார். இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச வீரர் டஸ்கின் அகமது முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்ஆட்டத்தின் கடைசி ஓவரை வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அஸ்லே குண்ரத்னேவுக்கு வீசினார், இதை எதிர்கொண்ட அவர் தூக்கி அடிக்க, அதை வங்கதேச வீரர் சவுமியா சர்க்கார் கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.  அடுத்து வந்த சுரங்கா லக்மல் லெக் திசையில் அடித்து ஆட, அப்போது லெக் திசையில் பில்டிங் நின்றிருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.  இதனால் தொடர்ந்து இரண்டு விக்கெட் எடுத்து விட்டதால், ஹட்ரிக் விக்கெட்டுக்கான பந்தை டஸ்கின் நுவன் பிரதீப்பிக்கு வீச, அதை பிரதீப் அடிக்க முயற்ச்சி செய்ய பந்தானது, பேட்டில் படாமல் ஸ்டம்ப்பில் பட்டது.  ஹெட்ரிக் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் டஸ்கின் அகமது அங்கும் இங்கும் பறந்தார். ஹட்ரிக் விக்கெட் எடுத்த அவரை சகவீரர்களும் பாராட்டினர்



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url