ஜெயலலிதாவின் தொகுதியில் கௌதமி போட்டியிடுகிறாரா




நடிகை கௌதமி சமூகநல ஆர்வலராக இருந்துவருகிறார். சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பிரதமர் மோடிக்கு இவர் கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதை தொடர்ந்து தற்போது ஒரு அரசியல் தகவல் உலா வருகிறது. இதன்படி மத்திய அரசு தன் ஆளும் கட்சி சார்பாக தமிழ்நாட்டில் சில முக்கிய பிரபலங்களை இறக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நடிகை கௌதமி, நடிகர் விஜயகுமார், நடன மாஸ்டர் காயத்திரி ரகுமார், கங்கை அமரன் ஆகியோரின் பெயர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லபடுகிறது.  இதில் கௌதமியிடம் மேல்தரப்பிலிருந்து அரசியல் பிரமுகர்கள் சிலர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லபடுகிறது.  இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகளாம்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url