Type Here to Get Search Results !

இந்திய அணிக்குதான் நெருக்கடி எங்களுக்கு இல்லை நேதன் லயன் கருத்து





கடைசி இரு டெஸ்ட் போட்டியிலும் நெருக்கடி எங்களுக்கு இல்லை, இந்திய அணிக்குதான் என ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் தெரிவித்துள்ளார்.  இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி ராஞ்சியிலும், கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் 25-ம் தேதி தொடங்குகிறது.  இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:  எங்களுக்கு நம்பிக்கை அதிகம் இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக பலரும் எங்களுக்கு எதிராகவே கருத்து தெரிவித்தனர். ஆனால் டெஸ்ட் தொடர் தொடங்கியதும் அவை அனைத்தும் மாறியது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கோப்பையை நாங்கள் தக்கவைத்துக்கொள்வோம். அதற்கு வேண்டியவற்றை நாங்கள் செய்வோம்.  நெருக்கடி இந்திய அணிக்குதான் உள்ளது, எங்களுக்கு இல்லை. எல்லோருமே நாங்கள் இந்த தொடரில் 4-0 என தோல்வி அடைவோம், சிறந்த வீரர்கள் அணியில் இல்லை, இளம் வீரர்கள் தற்போதுதான் பாடம் கற்று வருகின்றனர் என கருதினர். ஆனால் சிறந்த அணிகளை உலகின் எந்த பகுதியிலும் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.  இதை நாங்கள் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நிருபித்தோம். 2-வது டெஸ்ட்டிலும் நெருங்கி வந்தோம். இந்திய அணியின் நெருக்கடியை நான் உணர்வதாகவே நினைக்கிறேன். 2-வது டெஸ்ட் போட்டியின் போது எனது வலது ஆள்காட்டி விரலில் உள்ள தோல் உரிந்து காயம் ஏற்பட்டது.  3-வது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்னதாக காயம் குணமடைந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. கையில் பசை நாடா (டேப்) ஒட்டிக்கொண்டு பந்து வீசக்கூடாது என்ற விதி உள்ளது. அதனால் அதை பற்றி நான் சிந்திக்கவில்லை.  2013-ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போதும் இதே போன்று பாதிக்கப்பட்டேன். 3-வது டெஸ்ட் போட்டியின் காயம் அடைந்ததால் 3 நாட்களுக்கு பின்னர் தான் என்னால் விளையாட முடிந்தது.  தற்போது பயிற்சின் போது சிறிது வலி உள்ளது. எனினும் நம்பிக்கையுடன் உள்ளேன். அஸ்வினிடம் இருந்து உன்னிப்பாக சில விஷயங்களை கற்று வருகிறேன். அவர் ஓவரை வடிவமைக்கும் விதம் பெரிய வகையில் உள்ளது. இந்திய சுழ்நிலைகளுக்கு ஏற்ப வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் எப்படி பந்து வீசுகிறார் என்று அவரது வழியிலேயே அறிந்து கொண்டு வருகிறேன். கிரீஸை பயன்படுத்தும் விதம், பந்தை வித்தியாசமாக பிடித்து வீசும் திறன் ஆகியவற்றையும் கவனிக்கிறேன்.  இவ்வாறு நாதன் லயன் கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad