கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த டிடி
டிவி தொகுப்பாளர்களில் அதிகம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சிக்கு ரசிகர்களும் அதிகம் உள்ளனர். அதுமட்டுமின்று அவர் எப்போதுமே ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பார். மற்ற நடிகர்கள் படங்கள் அல்லது ட்வீட் பதிவிட்டால் அவர்களுக்கு உடனே வாழ்த்து கூறி பதில் ட்வீட் போட்டுவிடுவார் டிடி. இந்நிலையில் 'எங்க போனாலும் ஜால்ரா.." என இலங்கையை சேர்ந்த ஒருவர் டிடியை கலாய்த்திருந்தார். அதை பார்த்த டிடி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். "அதற்கு பெயர் ஜால்ரா இல்லை... வாழ்த்து சொல்வது. எதையாவது பார்க்கும் போது அது நன்றாக இருந்தால் நான் உடனே அதை பற்றி சில வார்த்தைகள் புகழ்ந்து பேசிவிடுவேன். மற்றவர்களை ஊக்கப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்," என விளக்கமளித்துள்ளார்